Tuesday, October 21, 2008

Combination

அவசர அவசரமாக கொண்டு வந்த உப்புமாவை ஆபீஸில் சாப்பிடும் பொழுது, இப்போ மசால் தோசை சாபிட்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. :-) அதற்கப்புறம் மனது சாப்பிடுவதில் Top 5 combination-களை வரிசைபடுத்தியது. சாப்பிடும் போது நல்ல இசையும் இருக்கணுமாக்கும்.

1. மசால் தோசை, தேங்காய் சட்னி, சாம்பார்/ வைரமுத்து-இளையராஜா பாடல்கள் (குறிப்பாக அந்தி மழை பொழிகிறது பாடல் இருந்தே ஆக வேண்டும்).
2. லெமன் சாதம், காரமாக உருளைகிழங்கு பொரியல்/ MSV-கண்ணதாசன் பாடல்கள் (குறிப்பாக நினைக்க தெரிந்த மனமே உனக்கு பாடல், அப்புறம் பேசுவது கிளியா என்ற பாடல்).
3. சோலே, பட்டுரா/ அந்த காலத்து லதா மகேஷ்கர் பாட்டு, அப்புறம் தேரே மேரே பீச்சுமே பாடல்.
4. இங்கே நான் கனடா வந்தவுடன் கண்டுபிடித்த combination. yellow corn muffin, நடுவில் fruit jam வைத்தது. அதனுடன் ஒரு cappucino காபி/ L.subramaniyan fusion violin.
5. இருப்பதிலேயே பெஸ்ட் combination நெல்லை மாவட்டம் மூலைகரைபட்டியில் (என் அம்மாவின் ஊர்) எங்கள் ஆத்தம்மா (அம்மாவின் அம்மாவை நாங்கள் இப்படித்தான் கூப்பிடுவோம்) பழைய சோறை நல்லெண்ணெய், மிளகு வைத்து பிசைந்து, கூட சுண்டவைத்த கறியும் (முந்தின தினம் வைத்த குழம்பு, காய்கறியெல்லாம் ஒன்றாக அடுப்பில் ரொம்ப நேரம் வைத்து சாப்பிடுவது) கொடுப்பார். அதை அடுப்பங்கரை வெளியே வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்து சாப்பிடுவது. கடைதெருவில் என்னடி முனியம்மா பாட்டு சத்தமாக loud speaker-இல் ஒலிக்கும்.

P.S.: இப்போ ஆத்தம்மா இல்லை, பழைய சாதமும் இல்லை :-(. என்னடி முனியம்மா remix ஆயிடுச்சு :-)

6 comments:

ஸ்ரீனிவாசன் said...

ennanga neenga...mukiyamaana vasthu va vittutinga?????

suda suda Pongal vachu...naduvulla sambhar oothi kulapi kaalaila 8 manikku saapta....apuram 11:30 varaikum oru thallatathuleye irukalam !!!!!

tamilana periya somberi aaakura mudal theevanam...pongal+sambhar...kooda oru medu vadai irunda innum jora irukkum...ennikaachum try panni paarunga :)

Raji said...

che...nalla combination..saapittu iruken, but not my fav...:)
pongal is one speciality of TN...athappoi somberi vasthu endru sllreengale srini.
aanaal onny miss panniteeng

Paattu?

மங்கை said...

My all time fav is Pongal...:-)

ஆனா நான் சோம்பேரி இல்லப்பா.. சொல்லிட்டேன்..:-)

Raji said...

mangai :-)
thanks for your visits to my blog.
I am really happy.
aanal yaarum paattu solla matikareengale :(
seri vidunga

ஸ்ரீனிவாசன் said...

Paatu thaana, inspirational song to hear while eating:

kalyaana samaiyal saadham...kaaigarigalum pramaadham !!!!

மங்கை said...

ராஜி

ஆல் டைம் ஃபேவ் பொங்கள் மாதிரி ஆல் டைம் ஃபேவ் பாட்டு..தில்லானா மோகானாம்பாள்..அப்புறம்...நான் ப்யூர் வெஜ்ஜா இருந்தாலும், நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மனக்கும் கத்திரிக்கா..ரொம்ப யதார்த்தமான பாட்டு, படாபட் ஜெயலக்ஷ்மியின் நடிப்பு... மனசை சந்தோஷமாக்கும்...