டேபோளினா, இது ஒரு வங்காள பெயர் என்றே எனக்கு முதலில் தெரியாது. இப்படி ஒரு சிநேகிதி இருக்கிறாள் எனக்கு. எல்லாம் ஒழுங்காக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், நடுவில் வந்து குட்டையை கிளப்புவாள். :-)
So I hate her because of this, but I also love her for the same reason. நீங்கள் எப்போதெல்லாம் தூங்குகிறீர்களோ அப்போது உங்களை எழுப்புவதே என் வேலை என்பார் நான் பின்பற்றும் ஒரு ஞானி. அப்படி ஒரு சம்பவமாகத்தான் டேபோளினா எனக்கு அளித்த பிறந்தநாள் பரிசை பார்த்தேன். city of joy என்ற ஒரு ஆங்கில பட dvd-ஐ எனக்கு பரிசாக கொடுத்து "இது என் நகரத்தை மையமாக வைத்து வந்த படம்" என்றாள். கல்கத்தாவிலிருந்து வந்திருக்கும் ஒரு மாணவி. கடவுள், ஆன்மிகம், கற்பு, புனிதம் இதை எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைபவள். அவள் கொடுத்திருக்கும் பரிசு கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கும் என்று பட்டது.
வீட்டிற்க்கு வந்தவுடன் அந்த திரைபடத்தை பார்க்க ஆரம்பித்தேன். நேரம் ஆக ஆக அது கல்கத்தா என்ற நகரத்தை பற்றின படம் இல்லை, ஒரு நரகத்தை பற்றின படம் என்று முடிவானது. இந்தியா போக வேண்டும் என்று ஒன்பது வருடங்கள் உலகம் சுற்றிய பிறகு நான் முடிவெடுத்திருக்கும் வேளையில், இந்த திரைப்படம் என்னுள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. போன முறை இந்தியா போன பொழுது என்னுள்ளே வந்த சில உணர்வுகள், மறுபடியும் மேலே வந்தது.
1. பணத்திற்கு கொடுக்கும் மரியாதை மனிதர்களுக்கு கிடையாது. கொஞ்சம் கூட, இங்கே கனடாவில் (அல்லது ஐரோப்பாவிலோ) பணம் இல்லாதவர்களை யாரும் எங்கேயும் இவ்வளவு கேவலமாக நடத்த முடியாது.
2. அதற்கு காரணம் எங்கெங்கு காணினும் மனிதனடா என்று இஷ்டத்திற்கு பெத்து போடறாங்க. 20 வயதில் படிப்பு, 25 வயதில் கல்யாணம், 30 வயதில் குழந்தை, அதுவும் பெண் குழந்தை என்றாள் இன்னும் ஒரு ஆண் குழந்தை பெத்துக்கோ என்று டாக்டர்களே அட்வைஸ் வேறு.அதற்கப்புறம் பணம், பணம், பணம். பணம் ஒரு முக்கிய கருவி, அது கரு அல்ல என்பதை மறந்து நம் மக்கள் ரொம்ப நாளாச்சு. அது எனக்கு 30 வயதில்தான் தெரியுது. இதில் மேலை நாடுகளில் கலாச்சாரமே இல்லை என்ற வெட்டி பந்தா வேறு.
3. மேற்கூறின இரண்டு அம்சங்களையும் சொன்ன அந்த திரைப்படம், ஒன்றை தவற விட்டிருக்கிறது. ஏனெனில் அது ஒரு அமெரிக்கனால் எடுக்கப்பட்ட திரைப்படம். உறவுகளில் இருக்கும் பொய்மை. I love you என்ற வார்த்தையை நாம் தான் எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்துகிறோம் நம் குடும்பங்களில். என் மாமா இறந்த வீட்டில் அவருடைய உடலை வைத்துக்கொண்டு அவரின் சொந்தங்கள் அடித்த கூத்து இருக்கிறதே, ஐயோ. அதற்கு அம்மா குடும்பம்னா இப்படித்தான் இருக்கும் என்றார். ச்சே என்று இருந்தது. நான், என் குடும்பம் என்று இருந்தது போய், நான் நான் என்றாகிவிட்டது. இது எல்லாம் எல்லா ஊரிலும் இருக்கே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள் என்னிடம். நான் குழந்தையாய், பின்பு மாணவியாய் இருந்த போது என்னிடம் சில பண்புகளை விதைத்து இந்த இந்திய சமுதாயம். அந்த பண்புகள் வெறும் வாய் வார்த்தை தானா. இதுதான் என்னுள் இருக்கும் கேள்வி. இதற்கு எனக்கு பதில் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வெறும் வார்த்தைகள்தான் என்றால் நான் அந்த இலக்கணத்தை உடைத்து காண்பிப்பேன். கண்டிப்பாய்.
ரட்சகன் 2
1 day ago
4 comments:
ஆழமான பதிவு !!!! அதே சமயம் மிகவும் ஆச்சர்யம் ஏற்படுத்தும் பதிவு ???? கிண்டல் செய்வதாக தவறாக நினைக்க வேண்டாம், உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு தோன்றிய கேள்விகள் :
1) நீங்கள் வேறு உலகத்தை சேர்ந்தவரா ????
2) Alice in wonderlandல இருண்டு வந்து இருக்கீங்களா ?
3) அல்லது உலகம் சுற்றி கொண்டே இருந்ததனால் மனிதர்கள் பற்றி அதிகம் அனுபவம் இல்லையா ????
I am not teasing you, but ask these questions to urself...coz...THIS IS THE REAL WORLD....u may be on the fortunate side of not experiencing it...but u may have to face it someday...so be prepared !!!!!!!!
அல்லது உலகம் சுற்றி கொண்டே இருந்ததனால் மனிதர்கள் பற்றி அதிகம் அனுபவம் இல்லையா ????
hahah srini...nice comment..I have met so many people, who have given me so many experiences(love, cheating, giving/taking etc. but I am just aware that I have a choice..which side of the court I should be in (imagine kabady game). Perhaps in my side there are less people...well that also avoids stampede. :-)
I have enough acceptance...r you that naive to imagine a single woman who started her journey penniless might have always seen the romantic and fancy side of the life? :-)
THIS IS THE REAL WORLD...
mmm if you still remember your physics in college...I would like to remind you that the reality has two sides...:-)
But I also beleive that the world i see is just a reflection of myself. In that sense YES I am not only from alice in the womderland....but also living in the same. illata...how come i would have met beautiful poeple like you and ram in orkut (Ram ennoda nalla friend-nu nianichen...che...:( avar naan just orkut friendnu sollitaar).
And now I have more friends thru this blog...Yaarooo(yes thats his name) and then another person whose name i cant even remember .:)
(ithu mokkaiyo thathuvamo illai...just my experiences...thanks for commenting...innum nalla thittunga)
Raji..waht Srini Has said is right..
this is our society,...i am realy surprised that u r surprised...
நீங்களே சொல்லிட்டீங்க reality has two sides nu..thats teh answer:-))
the side u want to be has very less competition as Indra Gandhi said.. :-)
hmm... I have read that book "the city of joy" quite a long time back. Yes, of course that book has not told me anything that we didnt see in our country, yet i felt as I was reading it, a bit of over dose of what every other nation will face from time to time (poverty and its associated ugly face...).
However, having read that book I was a bit of suspicious in nature questioning the intention of the author, as to whom he is trying to take the picture, what he wants out of it etc., (a bit politics behind the motive of that creation...).
Anyway, here is an useful piece something in the same line of your musings, might answer to some of your questions... (and there are some more interesting posts, when u get a chance go thru them, let me know thru comment what do u think of them...).
Innocence Is a Fountain in Finding Newness…!
Post a Comment