இன்று ஒரு தமிழ் வார இதழில் மணிரத்னத்தின் புதிய படமான அசோகவனம் படத்தின் கதையை படித்தேன். கதை பின் வருமாறு சொல்லபட்டிருந்தது.
"இதிகாச ராமாயணத்தில் ராமன் சொல்படி தீயில் இறங்கித் தன் கற்பை நிரூபிப்பாள் சீதை. மணிரத்னத்தின் புதிய ராமாயணத்திலோ, இன்னொருவனின் கண்காணிப்பில் இருந்த தற்காக தன் கற்பைச் சந்தேகப்படும் கணவ னான நவீன ராமனைவிட, தன்னை அபகரித்து... வாய்ப்பிருந்தும் தன் மீது சுண்டுவிரலைக்கூட உரசாத ராவணனே மேல் என்று முடிவெடுத்து அவனிடமே திரும்புகிறாளாம் நவீன சீதை"
ஹா ஹா என்று சிரிப்பு தான் வந்தது கதையை படித்து. அதை விட சிரிப்பு ஒரு வாசகரின் கருத்தை படித்து.
"இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒருத்தன் என்னை ரேப் பண்ணலனு ஹீரோயின் லவ் பண்ணுவாங்களோ தெரியல. சந்தேகப்பட்ட ராமனும் வேணாம்; என்னை ஒரு ஜடப்பொருளா நினைச்சு கடத்தின ராவணனும் வேணாம்னு சொல்றதுதான் நவீன சீதைக்கு அழகு".
என்னை யாரவது கடத்தினா என் பேச்சு தாங்காமையே அந்த மனுஷன் தீக்குளிக்க போய்டுவான். நான் சீதையா இருந்தா ராமாயணம் இப்படித்தான் முடியும்.
சதுரங்கம் 16
1 day ago
3 comments:
last Para : sirichu sirichu vayiru punnagiduchungo !!!!!!!!!
வணக்கம் ராஜி ...
..எனக்கென்னவோ கடத்தல் இப்போ பால் மாறியாச்சு போல தோணுது ...
உங்க நடை சரளமா இருக்கு ..தொடர்ந்து எழுதுங்க ...
நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன் பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com
-கார்த்தி
Saw your blog karthi romba nalla irunthathu. enakkum makkal pidikkum :).
Post a Comment