இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், அவன் பத்தடி எடுத்து வைப்பானாம், யாரோ சொன்னார்கள். ஆனால் என் அம்மாவை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் என் அம்மா நூறடி ஓடுகிறார்கள். ஏன் அம்மா? எங்கள் இடையில் இருக்கும் இடத்தை எல்லாம் நிரப்பினவர்கள், இப்போது காணாமல் போய் விட்டார்கள். இப்போது தான் தெரிகிறது எவ்வளவு தூரத்தில் இருக்கிறாள் அம்மா என்று. எங்கோ ஒரு பாட்டை கேட்டேனே....தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா என்று....அம்மா நீ மணக்கிறாய்.
No comments:
Post a Comment