Thursday, October 9, 2008

லக்ஷ்மி

லக்ஷ்மி என்னோடு பிறந்தவள்? பொதுவாய் சகோதர சகோதிரிகளை பற்றி பேசும் போது கூடப்பிறந்தவர் என்று குறிப்பிடுவர். இவள் உண்மையாலுமே கூடப்பிறந்தவள். என் இரட்டைப் பிறவி. இன்று இவளின் ஆக்ரோஷமான பாசத்தை கண்டேன். எனக்கு ஒன்று என்றால் இவ்வளவு கோபம் வருமா என்று ஆச்சர்யம். எனக்காக அம்மாவிடம் சண்டை போட்டாள். இரட்டைக் குழந்தைகளை பற்றி பேசும் போது, அவர்களுக்குள் டெலிபதி இருக்கும் என்று சொல்வார்கள். அதை பல தடவை உணர்ந்திருக்கிறேன் . என்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும். இறைவா என்னுடைய ஆயுளையும், அரோக்யத்தையும் சேர்த்து அவளுக்கு கொடுத்து விடு.

No comments: