இன்று தீபம் ஏற்றினேன். கைலாஷ் யாத்திரை முடிந்து திரும்பி வந்தவுடன் தீபம் ஏற்றியது இன்றுதான்.தீபாவளி என்பதற்காக அல்ல. ஏதோ ஒரு நாள் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும், அதை இன்று ஆரம்பிக்கலாமே என்ற எண்ணம். விளக்கு ஏற்றும் பழக்கம் வந்தது ஆத்தம்மாவை பார்த்து. தினமும் அரை ஆள் உயரத்தில் இருக்கும் செம்பு விளக்கை நெல் உமியால் விலக்கி, அதற்கு குங்குமத்தால் பொட்டு வைத்து, பின்பு அது வைக்கும் இடத்தை சுத்தப்படுத்தி, அப்புறம் அரிசிமாவு கோலம் போட்டு, விளக்கிற்கு சரம் தொடுத்து, அதை மாலையாய் போட்டு, விளக்கேற்றுவார்கள். இது தினமும் நடக்கும். ஆத்தம்மா இதை அவர்கள் மறையும் வரை செய்தார். இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. அவர்கள் பார்த்த வேலை அவ்வளவு.
விளக்கேற்றுவது ஒரு ஆத்மார்த்தமான செயல், அது ஒரு சடங்கு அல்ல. எங்கேயோ நான் ஏற்றின விளக்கு ஒளியை வழங்கிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் ஒரு மகிழ்ச்சியை தரும். ஒவ்வொரு முறை விளக்கேற்றும் போதும் இந்த ஷணம் எங்கேயோ நிம்மதியாய் தூங்கிக்கொண்டும், வேலை பார்த்துக்கொண்டும் இருக்கும் என் நண்பர்களையும் தோழிகளையும் நினைத்துக்கொள்வேன். போதும், பேசிக்கொள்வதும், அன்பை பரிமாறிக்கொள்வதும் அகங்காரமானதுதான். இன்று விளக்கேற்றுயதும் மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
சதுரங்கம் 16
1 day ago
No comments:
Post a Comment