இன்று ஒரு கதை படித்தேன். அதில்"பக்கத்து டேபிளில் ஓர் அழகான பெண் சர்வ் செய்துகொண்டிருந்தாள். கல்லூரியில் படிப்பவளாக இருக்கும். அவள் முகத்தின் சந்தோஷமும், துறுதுறுப்பும்... இளமை மெதுமெதுவாக எங்களை விட்டு நழுவுகிறதோ என்று எண்ணவைத்தது. பெரிய பெரிய விஷயங்களை யோசித்து வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்ற வருத்தத்தையும் மீறி இயலாமை ஒன்றும் வந்தது" என்று கதாசிரியர் எழுதி இருந்தார்.வாழ்கையின் சிறு தருணங்களை அனுபவித்துக்கொண்டே பெரிய விஷயங்கள் பற்றி யோசிக்கலாமே என்று தோன்றியது. வயதின் அழகு அதுதானே, குழந்தையின் மனமும், இளமையின் குதூகலமும், அனுபவம் கொடுக்கும் தெளிவும். ஒரு மொட்டை விட, அரும்பை விட, பூ அழகு. ஏன் மலர்வதை பார்த்து பயம் கொள்ள வேண்டும்.
3 comments:
kathaiya ????? sontha anubavam maadiri irukku :)
hahhaah
illai nijamaalume kathai thaan.I have my own nonsense and funny character. athanaal enakku appadi ellam thondraathu. but I enjoy seeing my students having fun of their age (aaanaal comapred to indian students...here students r serious...baabre)...and share with them lot of things of my Chennai days (in Ethiraj college) and then afterwards my days in Holland. :-)
unga students athunai perukkum en aazhntha anudaabangal :D
Post a Comment