இன்று திண்ணை.காம் என்னும் வலை பகுதியில் சங்கரர் பிறந்த இடமான காலடி பற்றி படித்தேன். :-) சேதுபதி அருணாச்சலம் மிக அழகாக சங்கரர் பிறந்த இடத்தை பற்றி எழுதி இருந்தார். ஜி.வி. அய்யர் எடுத்த சங்கராச்சாரியார் என்ற படத்தை பார்த்த போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சங்கரர் நான் பிறந்த மாநிலத்தில் பிறக்க வில்லை, நான் அவரின் மரபையும் பின்பற்றும் அத்வைதி இல்லை.பின் எனக்கு என்ன பிடித்தது?
அவர் பிறப்பிலும், வாழ்கையிலும், கடைசியில் இறப்பிலும் இருந்த ஒரு அழகு. தெய்வங்கள் மண்ணில் பிறந்த போது வாழ்கையை எவ்வளவு அழகாய் வாழலாம், இறப்பை எவ்வளவு அழகாய் எதிர்கொள்ளலாம் என்று காண்பித்திருக்கிறார்கள். :-), ஜி.வீ. அய்யர் ஒரு சிறந்த படைப்பாளி. சங்கரர் என்றாலும் ஒன்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை படம் பார்க்கும் போது. சங்கரர் பாத்திரத்தில் நடித்த நடிகர் மிகவும் வசீகரமாக இருந்தார். :-)
சதுரங்கம் 16
1 day ago
No comments:
Post a Comment