உன் விழி ஓரத்தில் இருக்கும் அந்த மெல்லிய இருட்டு
எங்கே உன் மலர்சிரிப்பில் மறைந்துவிடுமோ என்று பயமுறுத்தும் உன் புன்சிரிப்பின் ஓரம் உள்ள அந்த நிழல் இருட்டு
விழுந்த என் கை பற்றி தூக்கி நிறுத்தும் பொழுது நம் கைகளுக்கு இடையில் இருக்கும் இருட்டு
உன் பாதங்களில் சரணடையும் நிமிடம் உன் விரல்களுகிடையே உள்ள இருட்டு
உன் நிழலில் கவிழ்ந்திருக்கும் இருட்டு
இந்த இருட்டை நான் விரும்புகிறேன்
எந்த மடையன் சொன்னான் இறைவன் ஒளியை படைத்தான் என்று
படைத்தது இருட்டு ஓன்றே
நாம் தேடும் அத்தனையும் ஒளிந்திருப்பது அந்த இருட்டில் தான்
அந்த இருட்டு வெட்கப்பட்டு ஒளிந்திருக்கும் நேரம் வெளிச்சம் வெட்கமில்லாமல் வந்துவிடுகிறது
அந்த இருட்டை நோக்கி என்னை அழைத்து போ
ஏனெனில் வெளிச்சம் தரும் காட்சிகள் என்னை அலைகளிகின்றன
சதுரங்கம் 16
1 day ago
1 comment:
//அந்த இருட்டு வெட்கப்பட்டு ஒளிந்திருக்கும் நேரம் வெளிச்சம் வெட்கமில்லாமல் வந்துவிடுகிறது//
..அழகான கற்பனை !!
-கார்த்தி
Post a Comment