வள்ளலாரின் வார்த்தைகள்
என் வாழ்வில் சமீப காலங்களில் நான் புரிந்து கொண்ட வழி முறை. பூட்டிய கதவை திறக்கும் சாவி, இந்த மூன்று விதிகளும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலை த்யானமே.
உண்மையை உணர்ந்த ஒரு ஞானியின் முன் இரண்டு வருடங்கள் முன் நின்றிருந்தேன். த்யானத்தை பற்றிய ஒரு வினாவிற்கு பதில் அளிக்கும் போது, வாழ்வே தியானம் தானே? என்று ஒரு எதிர் கேள்வி கேட்டார். அப்போது புரியவில்லை அவர் சொன்னது. அதன் பின் நான் புரிந்து கொண்டது கீழ் வரும் நான்கு வழிகளே.
எதிர்பார்க்க கூடாது, உள் நிலை - வெளி நிலை சலனம் கூடாது, வயிறு முழுதும் நிரம்பாமல் பசித்திருக்க வேண்டும், ஓய்தல் இன்றி களைத்திருக்க வேண்டும். எங்கேயும், எப்போதும், யாருடனும் இந்த நான்கு வழிமுறைகள் பயன் தரும். இதை நான் புரிந்து கொண்டதற்கு அப்புறம் அந்த ஞானியை நான் பார்க்கவில்லை. காத்திருக்கிறேன் சந்திக்க.
சதுரங்கம் 16
1 day ago
No comments:
Post a Comment