Tuesday, July 22, 2008

எவனோ ஒருவனின் கவிதை

உன்னை அழவைத்துப்
பார்ப்பதில் எனக்கு என்னதான் இன்பமோ தெரியவில்லை!
வளையல் உடைத்து,
தாவணி கலைத்து,
முகத்துக்கு முன்னால் புகை ஊதி..
நீ கண் கலங்கும் போதெல்லாம் முன்னர் இருந்த
நான் வேறு போல உன்னை
அணைத்துக் கொண்டு மடியில்
சாய்த்துக் கொள்ள வேண்டும்
போல ஆகிவிடுகிறேன்.
நீயும் முன்னிருந்தவன் இவனில்லை
என்பது போல்உடனே
அணைப்புக்குள்ளாகி மடியில் சுருண்டு கொள்கிறாய்!
ஒரு குழந்தைபோல அழும் உன்னை
சமாதானப்படுத்தும்போது முன்னிலும்
அதிகமாய் உன் மேல் காதல் வசப்படுகிறேன் நான்!

ராஜியின் கருத்து: இப்படியெல்லாம் கூட ஆண்கள் இருக்கிறார்களா, எங்கே?

No comments: