நான் சற்று முன் சொன்ன கவிதை எழுதிய நண்பரின் பெயர் சங்கர். :-), என் அப்பாவின் வயது இருக்கும். ஆனாலும் நண்பர். நண்பனுக்கும் தோழிக்கும் தான் என்ன ஒரு வித்யாசம். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இருக்கும் வித்யாசம் மாதிரி. சங்கர் சொன்ன கவிதையின் தாக்கத்தில் மற்றொரு நண்பனுக்கு நான் ஒரு கவிதை சொன்னேன்.
"மலர்ந்த மொட்டே
நீ வாடிய பிறகும்
உன் வாசம் என் சுவாசத்தில் இருக்கும்
நான் வாடும் வரை"
மலர்ந்த மொட்டுக்கள் என்றாவது வாடத்தான் வேண்டும்.
ஆனால் வாடும் முன்பு அந்த வாசத்தை எவ்வளவு பேர் உணர்ந்தார்கள் என்பது அந்த மலருக்கு அர்த்தம் கொடுக்கும். ஆனால் இறைவனின் படைப்பில் வாசமே இல்லாத மலர்கள் இருக்கின்றனவே. அவை அழகில்லையா? :-)
சதுரங்கம் 16
1 day ago
No comments:
Post a Comment