என் வாழ்வின் முதல் ஐந்து வருடங்கள் ஆத்தம்மா வீட்டில் கழித்த நாட்களை அவ்வளவு சுலபமாய் நினைவுகளில் இருந்து அகற்ற முடியாது. ஆத்தம்மா அம்மாவின் அம்மா, இப்போது நினைத்து பார்த்தால் தெலுங்கு அம்மம்மாவையும் தமிழ் ஆத்தாவையும் ஒன்றாக சேர்த்து குழப்பின ஒரு வார்த்தையாக தோன்றுகிறது. அப்போதெல்லாம் ஆத்தம்மா என்றால் ஒரு மனுஷி மட்டுமல்ல, அவளோடு சேர்ந்து வாழ்ந்த மக்கள், அந்த ஊர், ஊரில் இருக்கும் வயக்காடு, கிணறுகள், loud speaker-இல் வரும் பாட்டுக்கள், அந்த ஊரில் இருக்கும் சினிமா கொட்டகை என்று எல்லாம் சேர்ந்து நினைவில் வரும். அம்மா அப்பா என்னை ஐந்து வருடங்கள் கழித்து திரும்ப அழைத்து கொண்டாலும், ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் திருநெல்வேலி செல்வோம். அப்படி செல்வது ஊரை பற்றின என் நினைவுகளை புதுப்பித்து கொண்டே இருக்கும். ஒரு முறை தவசு அத்தை என்னையும் லக்ஷ்மியையும் அந்த ஊர் சினிமா கொட்டகைக்கு அழைத்து சென்றாள். எதோ ஒரு படம், ஆனால் அந்த படத்தில் வரும் ஒரு பாட்டு என் நினைவில் இருந்து போகவே இல்லை.
எனக்கு ஏழு அல்லது எட்டு வயதுதான் அப்போது இருக்கும். படத்தின் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் முதல் இரண்டு வரிகள் நினைவில் இருந்தன. யேசுதாஸ் பாடினது, இன்று காலை எழுந்தவுடன் மறுபடியும் அந்த பாடல் மனதுக்குள் வந்தது. musicindiaonline-இல் கண்டுபிடித்து விட்டேன். எனக்கென்னவோ இது இன்னொரு "செந்தாழம் பூவில்" என்றே தோன்றுகிறது. அந்த பாட்டு அளவிற்கு பிரபலமாகாமல் போனதிற்கு காரணம், படம் ஒரு டப்பா. 1982-வில் வந்த படம். பாடல் வரிகளில் முதல் வரி மட்டுமே class. யாரோ வல்லபனாம், எழுதினது. கண்ணதாசன் எழுத வேண்டிய பாடல். அந்த முதல் வரி "மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்". :-), கற்பனை வளம் மிக்க வரி. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் நிஜமாவே யாரோ தேரில் செல்லும் உணர்வு வரும். இளையராஜாவிற்கு இசையோடு பாவத்தையும் கொண்டு வர முடியும் என்பதற்கு இந்த பாடல் இன்னொரு சான்று. அந்த பாடலின் இணைப்பு
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4705/singer.8034/
சதுரங்கம் 16
1 day ago
9 comments:
Very beautiful personal context for a movie song. பாடலை பற்றி கேள்விப்படிருக்கிறேன், கேட்டதில்லை. நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்.
thanks deepak. :-) kellunga nalla irukkum.
Oh you have background of Tirunelveli..I am more aquainted with tirunelveli as I still visit every year for my native at Tirunelveli! But as you expressed, the childhood visit to typical villages in those days..really owe a memory, I remember watching a movie in a village theatre at the same age as u say..i guess the film name is: Nenjilor Aalayam" the theatre dint have a seat..river-sands has to be heaped to create a seat, also in those days..there would be open-film screening in villages, which will yield lots of crowds, which also comes up at my memory!Now my village folks are watching Mega-serials at government gifted television boxes! You took me down to past-age, which was very Live!
super song.........i have not seen the visuals...but my imagination is like this:
Bhagyaraj in lead with the costume of red jippa and jil-jil pant with a red color bandanas with a leaf overheard. Heroine is old urvashi in maharaani dress, lots of white dressed angels in the background...then typically bhagyaraj spending half time in the chariot and singing this song !!!!!!!
WOW !!!!!!! amazing song !!!!!
PS: replace bhagyraj\urvashi with sudakar\radhika...sema kalakal ponga !!!!!
cheenu...:)) ungal yugam thappu. bahgayaraj nadichirunthaal konjamaavathu nalla iruhturukkum. ithu yaar yendre theriyathu...I think you second guess is right ...it might be sudhakar...though i am not sure. aaanal radhika illai.
ah theera neenga thirunelveliya? :)) yenge nellaiyil
Amam! A small village near Tiruchendur! And yours?
thiruchendur enakku romba oidicha oor. :)) antha senthil aandavan koil, kadal...ellaame romba pidikkum.
appavin oor valliyur pakkam...naan sonna aathamma oor nellai townil irunthu oru mani neram..naanguneri talukil varum
so nice Valliyur is familiar to me..i hav not been to Nanguneri, but heard about it..I will send you some photos of my village thro mail..!
Post a Comment