நம்மோட வாழ்கையிலே எதெல்லாம் அழகு..???
நாலு வருஷம் முன்னாடி ஒரு நாள் (இது ஹாலந்தில் நடந்தது) வேகமாய் பல்கலைக்கழகம் நோக்கி ஒரு மீடிங்குக்காக நடந்து கொண்டிருந்தேன். மனதில் பல விதமான யோசனைகள். ஒரு குறுகிய சாலையை கடக்கையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நான் கடந்து போவதற்காக வண்டியை நிறுத்தினார். சட் என்று நான் அவரை பார்க்க, ஒரு அழகான புன்னகை வந்தது, அவர் முகத்தில். ஒரு வழிபோக்கனின் புன்னகை இவ்வளோ நல்லா இருக்குமா என்று அப்போது தான் உணர்ந்தேன். அப்புறம் அந்த நாள் ரொம்ப அழகா இருந்தது.
என்னவெல்லாம் அழகு, எந்தெந்த அழகை எல்லாம் நாம் உணராமல் இருக்கிறோம் என்று யோசித்து பார்த்தேன். நீண்ட வரிசை மனதினுள் வந்தது. அப்போது எழுதினது எங்கோ காணாமல் போய் விட்டது. மீண்டும் மனதில் தேடி எழுதுகிறேன்.
வசந்த காலத்தின் தென்றல்
ஒற்றை ரோஜா
அன்றலர்ந்த மலர், மாலை நேரத்தில் கொஞ்சமே கொஞ்சம்
மலர்ந்திருக்க, இப்போவாது என்னை பாரேன் என்று சொல்வது
நண்பனின் (தோழியின்) அருகாமை
அண்ணனின் அணைப்பு
அப்பாவின் அறிவிரை (கடி)
அம்மாவின் வசீகரம்
அக்காவின் தாய்மை
லக்ஷ்மியின் திட்டு
ஆசிரியரின் வழிகாட்டுதல்
கோடை காலத்தின் முதல் மழை
மழை தரும் மண் வாசானை
ஆத்தா வைக்கும் கூட்டாஞ்சோறு
திணறி வேர்த்து நான் போடும் எட்டுப் புள்ளி கோலம்
ஓடும் ரயிலில் நாம் டாட்டா சொல்ல,
திருப்பி சொல்லும் ஒரு பெயர் தெரியா குழந்தை
தேயும் நிலா
தேய்ந்த பின் வரும் முழு இருட்டு
(கற்பனை) காதலனின் முத்தம்
கண்ணாமூச்சி ஆடும் கடவுள்
வழிபோக்கனின் புன்னகை.
நீங்களும் சொல்லுங்க!!!!
PS: ஆத்தா ஆத்தம்மாவின் short form; சில அழகுகள் புதிதாய் சேர்ந்தவை.
சதுரங்கம் 16
1 day ago
2 comments:
நீங்க இந்த மாதிரி list போட்டா எந்த காலத்துக்கு முடியுறது?
சத்குருவின் சத்சங்கத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது: "...உங்க உள்தன்மை அழகா இருந்தா பாக்கற எல்லாமே அழகுதான்..."
8 years before..one of my friend from china has written me similar mail quoting a strangers sight whice made her feel scared and threatened..! For you it has given a warm gestures...! Naam parkkum vithathill thaan ulagam nammai parkirathu enbathu serithaan...!
Post a Comment