Wednesday, November 5, 2008

I am a solitary woman

நேற்றிலிருந்து வீட்டில் வலை இணைப்பு இல்லை. வீட்டு தொலைபேசியும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இணைப்புகள் அனைத்தையும் ஒரு மாதத்திற்கு முன்னையே துண்டித்து விட்டேன். கடைசி நேரத்தில் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டாமே என்றுதான். நேற்று வீட்டுக்குப் போனவுடன் தான் வலை இணைப்பு இல்லாத வெறுமை முகத்தில் அறைந்தது. :)...ஒரே ஒரு செல் போன், அந்த எண்ணும் வெகு சிலருக்கே தெரியும். உண்மையான தனிமை ரொம்ப பிடித்திருந்தது. இந்த செல் போனையும் தூக்கி எறிந்துவிட்டால் என்ன என்று தோன்றியது.

இன்று காலையில் inbox-ஐ திறந்த போது, நிறைய மெயில்கள். :-)....தனிமை எந்த அளவிற்கு அழகோ, அதை விட நட்பின் தொடர்பு அழகு. என் நண்பனிடம் இருந்து ஒரு மெயில். ஹாலந்தில் நான் PhD பண்ணிய போது, என்னுடன் கூட படித்தவன். இந்தியா போகிறேன் என்று தெரிந்து தொடர்பு கொண்டிருந்தான்.
டச்சு ஆண்கள் சுவாரஸ்யமானவர்கள். என் இத்தாலிய தோழி "dutch men are gross and crude" என்பாள். எனக்கு அவர்களின் பாசாங்கு இல்லாத அன்பும், நட்பும், அக்கறையும் பிடிக்கும். அந்த நட்பில் ஒரு comradeship இருக்கும். நீ பெண் நான் ஆண் என்று உணர்த்தாமல், நாம் நண்பர்கள் என்று இருக்கும். கண்டிப்பாய் இத்தாலிய ஆண்கள் இப்படி இல்லை. ஒரு பெண்ணை பார்த்தவுடன் உடனேயே எழுந்து அவளின் கையிலோ, கன்னத்திலோ முத்தமிடுவார்கள். :-) அப்படி பார்த்தால், yes dutch men are not elegant. கூட படிக்கும் பெண் கர்ப்பமானால், வாழ்த்துக்கள் என்றுவிட்டு, எங்களில் யார் இதற்கு அப்பா என்று கிண்டல் பண்ணுவார்கள். அந்த பெண்களும் போடா பொறுக்கி என்று சிரித்து கொண்டே போய்விடுவார்கள். முதலில் இதை எல்லாம் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாய் இல்லை.....வேடிக்கையாய் இருந்தது.
என் நண்பன் guus (இதை huus என்று சொல்ல வேண்டும்) அப்படி எல்லாம் இல்லை. comradeship இருக்கும் ஆனால் அதில் ஓர் அழகும் இருக்கும். stanford-இல் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறான். இன்று காலையில் அவனின் மெயில் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். அவனின் இரண்டு வயது மகள் முட்டைகோஸ் மாதிரி வேகமாக வளர்கிறாள் என்று எழுதி இருந்தான். அடப்பாவி இதை விட அழகான உவமை கிடைக்காதாடா உனக்கு என்று தோன்றியது டச்சு ஆண் இல்லையா :-), இப்படித்தான் அவனும் இருப்பான்.
அவன் எழுதி இருந்த கடைசி வரி எங்கள் நட்பின் புரிதலை வெளிப்படுத்தியது அது "I'm surprised but also delighted to here that you move back to India. After living abroad for just a year I can only imagine how it feels tobe so far away from "home" for so many years. "
நன்றி நண்பா

No comments: