இப்படி ஒரு சுந்தரர் பாட்டு, சௌம்யா பாடி இன்று கேட்ட பொழுது மனம் நெகிழ்ந்தது. சுந்தரர் இறைவனை தோழனாய் நினைத்தவர். இந்த இறைவன் யார் என்ற கேள்வி இந்த பாட்டு கேட்கும் பொழுது என்னுள் எழுந்தது. அதிகாலையில் நம் மனதில் தான் எவ்வளவு கேள்விகள் எழுகின்றன?
இறைவன் நான் கண்ணால் பார்க்கும் என் குருவா, நான் குழந்தையாய் பள்ளியில் கை கூப்பி வணங்கிய ஏசுவா, லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லும் போது மனதில் தோன்றும் இறைவியா, இல்லை என்னை அன்புடன் அணைக்கும் சக மனிதப்பிறவியா என்ற கேள்வி எழுந்தது. chemistry- இல் equillibrium reactions என்று இருக்கும். இடம்-வலம் என்று இரு பக்கமும் போகும். அப்படித்தான் இறைமையும். இப்படி, அப்படி, எப்படியும் என்று இருக்கும்போல. அப்படித்தான் இன்று காலையில் தோன்றியது. கைலாஷில் இருக்கும் பொழுது அந்த இறைவனுக்கும் என்னுடைய குருவுக்கும் வித்யாசம் தெரியவில்லை. ஒரு சமயம் குருவாய் இருந்தவர் மறுகணம் இறைவனாய் தெரிந்தார், பின்பு அவரே இறைவியாகவும் மாறினார், பின்பு அது வெறும் கல்லாய் தெரிந்தது, பின்பு நான் அது வரை அறிந்திராத தாய்மையை உணர்த்தியது, பின்பு மறுபடியும் குருவாய் புருவ மத்தியில் கை வைத்தது. இப்படி குழப்பி, பின்பு தெளியவைப்பது தான் இறைவனா.
மீரா பாடிய சாவரீ ரங்கு ராசே என்ற பாடலில் மீரா இறைவனை எல்லாமுமாய் காண்கிறார். :), எனக்கு மீரா, ஆண்டாள், அக்கா மாதேவி போன்றவர்கள் பெண்ணியத்தின் உச்சகட்ட வெளிபாடு என்றே தோன்றுகிறது. சக ஆண்களை ஒதுக்கி எங்கோ-இங்கே இருக்கும் இறைவனை மணந்தவர்கள். ஒரு நண்பர் மற்றொரு பெண்ணின் கேள்வியை எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.
பெண்கள் மந்திரம் சொல்வது சரியா தவறா?.இது தான் கேள்வி. எனக்கு லலிதா ஸஹஸ்ரநாமம் தான் உடனே நினைவுக்கு வந்தது. மண்ணில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் இறைவியே என்று எனக்கு உணர்த்திய வாக்குகள் அவை. சில மந்திரங்கள் பெண்களுக்கு ஒரு பயனும் அளிக்காத வாக்குகளாக இருக்கலாம், சில தேவை இல்லாதவையாகவும் இருக்கலாம், சில மிகவும் வலிமையானதாக இருப்பதால் பெண்ணின் மென்மையான மனதுக்கு ஏற்றதாக இருக்காது. காயத்ரி மந்திரத்தை இப்படி சொல்வார்கள். ஆனால் பெரும்பாலும் பெண்கள் சொல்லக்கூடியவைத்தான் எனக்கு தெரிந்த வரையில். அதுவுன் ஓம் எனபது எல்லாருக்கும் ஏற்றதுதான். பின்பு ஏன் இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் ஏற்பட்டது என்று எனக்குள் ஒரு வினா எழும்பியது. எங்கோ, உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பெண்ணை விட உட்கார்ந்து மந்திரம் சொல்லும் பெண் மிகுந்த அச்சத்தை தருகிறாள் போழும்.
இந்த பதிவை எழுதும் போது மீராவின் ஒரு பாடலை கேட்க நேர்ந்தது. அந்த பாடலின் இணைப்பு கிழே. மீரா ஒரு பேதை...அக்காவைப் போல ஆண்டாளைப் போல ஞானி அல்ல. :(
http://www.youtube.com/watch?v=KKCun86pIb0&feature=related
சதுரங்கம் 16
1 day ago
7 comments:
A very good expression of unexpressive feelings! Thanks!
Your last sentence, not sure why you say that?
:)
I always thought meera is more emotional, naive and childlike.
You wont believe....I am also like that in certain parts of life...though i know its practically stupid (I am not longing for krishna to marry me though :D)...so sometimes I feel its not wise to be like her.
If you hear akkas poems and aandals thirupaavai...it shows their wisdom, especially aandaal...she even thinks that kirshna is fortunate to have her. With meera its always meloncholy...mostly...for not having krishna or unrealistic lyrics...which reflects her longing.
:D
Raji,
I cannot comment on Meera, but if she attained in the end, yearning for the Lord, I am sure it was all worth it :)
Also, I forgot to mention about the Sundarar pAttu - that phrase is so touching. Those times, people who experienced were also able to put these into words in inconceivable ways!
நித்ய ஸ்றீ பாடி ‘துன்பம் நேர்கையில்’ கேட்டிருக்கிறார்களா? பக்தி அல்ல... ஆனால் மொழி அருமையாக இருக்கும். மீரா பாட்டின் இணைப்பு வேலை செய்யவில்லை போலுள்ளதே?
Yes chanakyan I have heard it. Bharathidasan pattu. Its about a child...but in a very old Tamil movie called or iravu...the lover will sing this towards his girl :)...
have you seen this movie. Aringar anna wrote dialogues and screen play. it was originally a drama which became a movie later.
Yeah, I have watched that song from the movie... !
Post a Comment