Tuesday, April 27, 2010

கடவுளின் கனவு



கடவுள் அவள் கனவு கண்டாள்
கண்ட அவள் கனவில் நான் வந்தேன்
வந்த மௌன -கனவில் அந்த முகம்
முகம் நிழலாய் என் முன்னே நிற்க
நின்ற அந்த பொழுது நான் என் உயிர் துறந்தேன்
துறந்து என் உயிர் தயங்கி நிற்க ; அவள் கனவும் நின்றது
நின்ற அவள் கனவு மறுபடியும் துளிர்க்கவே இல்லை
இல்லாத அந்த கனவை இப்பொழுது யார் காண்பது
கண்டேன் சீதையை என்று தூது போன அவனா?
அவன் தோழன் சுந்தரனுக்கு போனானாமே தூது
அப்படி தூது நீ செல்லடி என் கடவுளே
நான் உறக்கம் கொள்ள தாலாட்டு நீ பாடியது போதும்
நீ உறங்கினால் மறுபடியும் பார்ப்பேன் அந்த நிழல் முகத்தை

3 comments:

Thekkikattan|தெகா said...

எப்படிங்க கனவில vagueவா கிடைக்கிறதை இப்படி கோர்வையாக்கி கொடுக்க முடியும்... அழகா வந்திருக்கு!

//நின்ற அவள் கனவு மறுபடியும் துளிர்க்கவே இல்லை //

துளிர்க்காம விட்டுட்டா எப்படி, மழைத் துளி எங்கும் எப்பொழுதும் விழுந்து கொண்டே இருக்கிறது, எனவே துளிர்க்கும்.

Anonymous said...

A very beautiful & complex poem..Let me list the characters here: 1.God 2. She. 3. You. 4. Mugam. 5. Couple of Messengers! A good collage! :)

Mahes said...

Hai Raji.. This is Maheshwaran (http://valaiyulagam.blogspot.com) and I came across your comments on my posts today only. Thanks for patiently going through my posts and based on your comments I feel that you are vulnerable and emotional person like me. You can stay in touch with me through maheshwaran.i@gmail.com because I don't go through my own blogs often.