Wednesday, April 21, 2010

மாரியம்மாவும் ஆண்டாளும்

பூ படத்தின் இயக்குனர் சசி அவர்களுக்கு என் கோடி நமஸ்காரங்கள். அந்த படம் ஒரு சிறந்த படம் என்பதற்காக மட்டும் இல்லை இந்த நன்றி, முதன் முதலில் தமிழ் சினிமாவில் காதல் தோல்வி அடைந்த ஒரு பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறாள் என்று காண்பித்ததற்காக இந்த நன்றி. பொதுவாக நம் சினிமாக்களில் காதல் தோல்வி அடைந்த ஆணுக்கு கூட நல்ல மனைவி கிடைத்து விடுவாள் (அப்படிதான் காண்பிப்பார்கள்), ஆனால் பெண் ஒரு சந்தேகப்படும் கணவனையோ, அல்லது குடிகாரனையோ கட்டிக்கொண்டு அல்லது புருஷன் மண்டையை போட வெள்ளை சேலை உடுத்திக்கொண்டு அல்லது காதலனுக்கு இனையான நல்ல புருஷனாக இல்லாமல் நோஞ்சான் அல்லது வழுக்கு மண்டை ஆசாமிக்கு மனைவியாக வருவாள், அல்லது சமூக சேவை செய்வாள் . :( அழகி, ஆட்டோகிராப், விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் பல "நல்ல" படங்கள் இதற்கு உதாரணம். அனால் ஆண் மட்டும் நல்ல சந்தோஷமாய் வாழ்வான், அவ்வப்போது காதலியை எண்ணி கண்ணீர் வடிப்பான், அல்லது காதலிக்கு அவ்வப்போது பணம் கொடுப்பான், அல்லது அவன் வீட்டு வேலைக்காரியாக வைதுகொள்வான். இதை மாற்றி காண்பித்த எனக்கு தெரிந்த ஒரே தமிழ் படம் பூ ஒன்று தான். சொல்ல போனால் மாரியம்மா காதலித்த அவள் மாமன் மகனை விட அவள் கணவன் நல்ல ஒரு ஆண் மகன், அவளுக்கு வாய்த்த வாழக்கை அவனின் வாழ்க்கையை விட உன்னதமானது. நன்றி சசி, நிஜத்தில் எனக்கு தெரிந்த பெண்கள் இப்படி எவ்வளவோ பேர்.

இதையும் தாண்டி இந்த படத்தில் எனக்கு பிடித்த சில விஷயங்கள் பல. ஆண்டாளின் காதலுடன் மாரியம்மாவின் காதலை ஒப்பிடுவது, நான் ஏன் காதலை மறக்கணும் என்று மாரியம்மா திருமணம் ஆனவுடனும் கேட்பது, நான் சந்தோஷமாய் இருப்பேன் என்று மச்சானுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனப்புறமும் சொல்வது....சசி யு நோ வாட் இஸ் லவ் அண்ட் லைப். தேங்க்ஸ்.

ஆண்டாளை இழந்ததற்கு அந்த பெருமாள் தான் வருத்தபட வேண்டும்....

5 comments:

Thekkikattan|தெகா said...

ஆனால் பெண் ஒரு சந்தேகப்படும் கணவனையோ, அல்லது குடிகாரனையோ கட்டிக்கொண்டு அல்லது புருஷன் மண்டையை போட வெள்ளை சேலை உடுத்திக்கொண்டு//

ஹாஹாஹா, செம அவதானிப்புத்தேய்ன் போங்க... அது ஒண்ணுமில்ல நீதி போதனை வகுப்பு எடுக்கிறாங்களாம், அப்படியே வாழைப் பழத்தில ஊசி ஏத்துற மாதிரி. நானும் பூ படம் பார்த்தேன், பிடித்திருந்தது.

ஆமா, என்னாச்சு ரொம்ப நாள் கழிச்சு வந்து இப்படி ஒரு அட்டாக் :))

Raji said...

naan yositha neriya vishayangal ippadi attack vagaiyai sernthathu.thatas why didnt write....ezhutha konjam thayakkamaa irunthuchu...en nanban ramesh sonnaan...nee yezhuthen...en unamiyai paarthu payapadure endru...ezhuthitten..:D

Anonymous said...

Good Expression! Poo oru Etharthamana padam, we rarely happen to get such movies in tamil film Industry! Reality often has a different smell from illusion:) Continue your attacks raji..:)

Anapayan said...

உண்மையச் சொல்லனும்னா, காட்சி வலைப்பக்கத்துல உங்க மறுமொழியப் பார்த்துட்டுதான் உங்க தளத்துக்கு வந்தேன். வந்த உடனே ஒரு நல்ல ஆச்சரியம். அட... நீங்களும் ஒரு உயிர்தொழில்னுட்பவியல் பட்டதாரி/சம்பந்தப்பட்டவர்! பூ படம் பத்தி நல்லா எழுதியிருக்கீங்க.வெளிப்படையான பேச்சு, ஹாஸ்யம் கலந்த நடைன்னு கலக்குங்க! இன்னும் நிறைய எழுதுங்க, வாழ்த்துக்கள். ஆனா sign off பண்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு வேண்டுகோள், (அறிவியல் பதிவுகள் பிரதானமா இருக்குற) என்னோட வலைப்பக்கம் (http://padmahari.wordpress.com) பத்தின உங்களோட கருத்துக்கள கொஞ்சம் எழுதுங்க. நன்றி!
பத்மஹரி.

Raji said...

Sure Padmahari...I will do it.