Friday, January 2, 2009

எழுத்தறிவித்தவன் இறைவனே

Extract from Kumudam.com

கற்பிக்கும் பணி. மீதி கிடைக்கிற நேரம்தான் குடும்பத்துக்கு. கடந்த நான்கு வருடங்களாக இதுதான் சங்கரின் தினசரி ஷெட்யூல்.
`படிச்சு என்ன பண்ணப் போறோம்?' என்று சலிக்கிற குடி சைப்பகுதி குடும்பங்களைச் சேர்ந்த நானூறு குழந்தைகள் மீது இவரால் இன்று கல்வி வெளிச்சம்.சூளையில் வசிக்கிற சங்கர் பணிபுரிவது சென்னை உரத் தயாரிப்பு நிறுவனத்தில். கிடைப்பது மனசுக்கு நிறைவான சம்பளம். ``ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கத்துக்கொடுக்கணும்னு ஒரு ஆசை. எனக்குத் தெரிஞ்ச ஒரு ஸ்கூலுக்குப் போய்க் கேட்டேன். டிப்ளமோதானே முடிச்சிருக்கீங்க. பி.எட் படிச்சுட்டு வாங்கனு சொல்லி என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க'' என்கிறார் சங்கர் விரக்திச் சிரிப்புடன். கடைசியில் `ஸ்பீடு ட்ரஸ்ட்' என்ற அமைப்பின் இயக்குநர் பிலிப்ஸ், சங்கருக்கு இடமும் வாய்ப்பும் தந்து உதவியிருக்கிறார்.
கூவத்தின் கரையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தீவுத்திடல் வரை நீண்டு கிடக்கிற குடிசைப்பகுதி. அங்கே வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட ஏறக்குறைய 2500 குடும்பங்கள். இவர்கள்தான் சங்கரின் உடனடி இலக்கு.``வீடு வீடா போய் பசங்களைப் படிக்குறதுக்குக் கூப்பிட்டேன். `படிக்காத நீங்க பக்கத்திலுள்ள ஜி.எச்சுக்கு பேஷண்ட்டாகத் தான் போக முடியும். உங்க பையன் படிச்சா மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்டா போகலாம்'னு பிரச்சாரம் செஞ்சேன். என் மேல் நம்பிக்கை வர்றதுக்காக சுதந்திர தின விழா, குடியரசு தின விழானு தொடர்ந்து நடத்தி, அவங்களைக் கலந்துக்க வச்சேன். மக்கள் மெல்ல மாற ஆரம்பிச்சாங்க!'' என்று சொல்கிற சங்கரின் கண்களில் அந்த சந்தோஷத் தருணங்கள் நிழலாடுகின்றன. இன்று எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை 400 மாணவர்களுக்கான வகுப்புகள் திட்டமிட்டபடி சீராக நடக்கின்றன.
இது எப்படி சாத்தியமானது? ``ஸ்கூல்னாலே முகம் சுளிச்ச அதே குழந்தைகள்தான் காரணம். படிப்பின் ருசி தெரிஞ்ச பிறகு அவங்க காட்டுன ஆர்வம் என்னைப் பிரமிக்க வச்சது. 2004ல் சுனாமி துவம்சம் பண்ணிய பகுதிகளில் இந்த ஏரியாவும் உண்டு. பலவீடுகளில் துணி, பாத்திரம், பாடப் புத்தகம் எல்லாமே கடலோடு போயிடுச்சு. இந்த நிலைமையிலும், எங்கிட்ட படிச்ச மூணு பொண்ணுங்க எஸ்.எஸ்.எல்.சி எக்ஸாம்ல தொண்ணூறு சதவீத மார்க் வாங்குனாங்க. இவங்க ஆரம்பத்துல ரெகுலர் ஸ்கூலில் மந்தமான ஸ்டூடண்ட்ஸ்னு திட்டு வாங்குறவங்க!'' என்று சொல்கிற சங்கருக்கு இந்த வருடம் இன்னும் விசேஷமானது. இவரிடம் படித்த மூன்று மாணவர்கள் சென்னையிலுள்ள ஒரு இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்திருக்கிறார்கள். மூவருமே கூலிவேலை செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். ``நான் ஃபேமிலியோட இருக்குறதே இல்லைனு ஆரம்பத்துல என் மனைவிக்குக் கோபம் இருந்துச்சு. அப்புறம் மாணவர்கள் எக்கச்சக்கமா மார்க் எடுக்கிறதைப் பார்த்து அவளும் உற்சாகமாகிட்டா!'' என்று நம்மிடம் விடைபெறுகிற சங்கரின் கனவு, தன்னிடம் படிக்கும் ஒரு மாணவனுக்காவது அடுத்த வருடம் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதுதான்..

3 comments:

Anonymous said...

We are living in a society where we don't have good leaders, like before 4 decades, to get inspired..but its good atleast to know there are some good individual's like sankar...!

butterfly Surya said...

சங்கர் போன்ற நல்ல உள்ளங்களை ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல பதிவு.

வாழ்த்துகள் ராஜி.

உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

நன்றி.

raki said...

all kudos for such an unselfish and appreciable attitude